அங்கன்வாடில கூட திருட்டு: பன் திருடி போலீசுக்கு டுவிஸ்ட் கொடுத்த கில்லாடி திருடன்…!!

Author: Sudha
7 August 2024, 12:26 pm

குமரி மாவட்டம் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இரண்டு கோவில் உண்டியல்கள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் பேக்கரி கடை மற்றும் ஒரு வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு எதுவும் கிடைக்காமல் மூதாட்டி ஒருவரின் வீட்டு சமயலறையில் வைத்திருந்த பழைய பன் மற்றும் பேரிச்சம் பழத்தை திருடி சாப்பிட்டு சென்றார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணையில் இறங்கினர்.

பணமோ பொருட்களே திருடு போகாமல் இருந்ததால் ஏதோ சைக்கோ திருடனாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசாருக்கு பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை கொத்தனார் வேலை செய்யும் ரெகு 46 என்றும் காலை வேளைகளில் கொத்தனார் வேலையும் இரவு நேரங்களில் பல இடங்களுக்கு சென்று திருடுவதையுமே பிரபல தொழிலாக கொண்டவர் என்றும் அருமனை மார்த்தாண்டம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் தற்போது ஒரு திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் கண்டிசன் பெயில் கையெழுத்து போட்டு வருவதும் தெரியவந்தது.

இதற்கிடையே தான் இந்த திருட்டையும் அரங்கேற்றி இருந்தது போலீசாருக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. இதனையடுத்து ரெகுவை கைது செய்ய காத்திருந்த போலீசார் எதுவும் தெரியாதது போல் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு கண்டிசன் பெயில் கையெழுத்து போட்டு விட்டு வீட்டிற்கு செல்வதற்கு பேருந்திற்கு காத்திருந்த வேளையில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 196

    0

    0