காவலர் சீருடையில் அரிவாளுடன் வந்த நபர்… அருகில் இருந்தவர்களுக்கு சரமாரி வெட்டு.. பூட்டு போட்ட மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 12:55 pm

தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரசாமிபேட்டை பகுதியில் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் தலைமை காவலர் சீருடை அணிந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சத்தம் போட்டுக் கொண்டு வந்தார்.

அங்கிருந்த இளநீர் கடையில் அரிவாள் எடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்களை துரத்தி உள்ளார். அப்போது அங்கே இருந்த ஜெபகன்னி -35 என்ற நபரின் கைவிரல்களை வெட்டியுள்ளார்.

பிறகு அங்கிருந்து பொதுமக்கள் அவரை துரத்தியபோது அருகில் இருந்த குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி கோயிலில் நுழைந்தவர் கோவிலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரி (55)என்ற பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டி உள்ளார்.

பிறகு அங்கிருந்தவர்கள் அவரை கோவில் அறையில் வைத்து பூட்டி உள்ளனர். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, ஓசூரில் இருந்து வருவதாகவும் அங்கு வெயிலில் காய வைக்கப்பட்டிருந்த தலைமை காவலர் சீருடையை அணிந்து கொண்டு வந்ததாகவும் சீருடையை தைத்தவரின் முகவரியில் தர்மபுரி ஆயுதப்படை அருகில் உள்ள கே.ஆர்.என் டைலர் பெயர் உள்ளது.

தனது பெயர் சித்திக் விக்னேஷ் (23) செம்மேரிகுளம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார்.இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 321

    0

    0