நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் : செருப்பால் அடித்து விரட்டிய பெண்.. வைரலாகும் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 12:39 pm

பழனியில் நடந்து சென்ற பெண்ணை பின்னால் தட்டி சில்மிஷம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே திருநகரில் வசித்து வருபவர் முகமது அலிஜின்னா‌ (வயது 33). மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகைவீட்டில் வசித்து வரும் முகமது அலி ஜின்னா பழனி அடிவாரம் பகுதியில் சைக்கிளில் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடந்து சென்றபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் பெண்ணை பின்புறம் தட்டி சென்றுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடுவதை கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமது அலி ஜின்னா வை விரட்டிசென்று பிடித்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் முகமது அலி ஜின்னா வை செருப்பால் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சில்மிஷ பேர்வழி முகமது அலி ஜின்னா வை நன்கு கவனித்து வழக்குப்பதிவு செய்தனர்.

https://vimeo.com/787824033

தொடர்ந்து தற்போது பழனி அரசு மருத்துவமனையில் போலீசார் பாதாகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்ணிடம் சில்மிசம் செய்து சிக்கிய நபரை பாதிக்கப்பட்ட பெண்‌ செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 392

    0

    0