திடீரென வெடிகுண்டு வெடித்தது போல சத்தம்… உயிருக்கு போராடிய ஒருவர் பரிதாப பலி : விசாரணையில் ஷாக் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2023, 7:38 pm

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியில் முருகன் என்ற நரிக்குறவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பன்றி பிடிப்பதற்காக நாட்டு வெடி தயார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டு வெடி தயார் செய்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் முருகன் (41)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவரது மகன் பகவதி (வயது 21) உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்தார் ராணிப்பேட்டை துணை காவல்துறை கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான போலீசார் வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடி விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!