கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 51) மற்றும் ஓலம்பஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 32) இருவரும் YAMAHA fz இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் நஞ்சுண்டாபுரம் பாலத்தில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வானத்தில் பின்னால் அமர்ந்திருந்த சரவணகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலிசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.