ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் நேற்று இரவு கைலி சட்டை அணிந்து வந்த நபர் திடீரென கையில் இருந்த பெட்ரோல் குண்டை பெட்ரோல் பங்க் மீது வீசி உள்ளார்.
அது வெடிப்பு சிதறி தீ பற்றி எரிந்தது. அதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் பதறி அடித்து ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்பு பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை போலீசார் எடுத்து அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரில் வசித்து வரும் கணேசன் (35) என்பது தெரிய வந்தது. உடனே நகர் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த வாலிபர் பலமுறை அந்த பெட்ரோல் பங்கில் சென்று வேலை கேட்டுள்ளதாகவும் அவர்கள் வேலை கொடுக்காததால் ஆத்திரத்தில் அவர்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தது தெரியவந்தது.
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
This website uses cookies.