கோவை பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு… குவிந்த பாஜகவினர் : வெடித்த போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 10:32 pm

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகர பாஜக கட்சி அலுவலகம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மர்மநபர்கள் இன்று இரவு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

இந்த பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வெடிக்கா நிலையில் கிடந்த பெட்ரோல் குண்டையும் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோவை பிஜேபி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு கிடந்தது தொடர்பாக மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 459

    0

    0