காக்கிச் சட்டை போட்டுட்டு செய்ற வேலையா இது? போலீஸ் கான்ஸ்டிபிள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2024, 12:47 pm

பெங்களூரில் இருந்து சில பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தனர். அவ்வாறு வந்த ஹரிபாபு, ஜெகதீஸ் ஆகிய பக்தர்களுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் சந்திரசேகர் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக தொடர்பு கொண்டார்.

இதற்காக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்க ஒருவருக்கு அரக்கு எம்எல்ஏ பரிந்துரை கடிதம் ₹20 ஆயிரமும் மற்றொரு பக்தருக்கு எம்எல்சியின் பரிந்துரை கடிதத்தின் பேரில் 6 டிக்கெட்டுகளுக்கு மற்றொரு ₹50 ஆயிரத்தை சந்திரசேகர் பெற்று கொண்டார்.

ஆனால் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்று தராமல் ₹300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் வழங்கி உள்ளார்.

இதையும் படியுங்க: சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 4 பேர் பலி!

இதனால் ஏமாற்றன் அடைந்த பக்தர்கள் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளை அணுகினர். இதனையடுத்து போலீஸ் கான்ஸ்டபிள் சந்திரசேகரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வி.ஐ.பி. தரிசனம் செய்வதாக கூற எத்தனை பக்தர்களிடம் சந்திரசேகர் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொள்ளும் அதேநேரத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது துரதிஷ்டவசமானது. பக்தர்களை ஏமாற்றுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

  • Vetrimaaran Viduthalai controversy A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!
  • Views: - 25

    0

    0

    Leave a Reply