பெண் போலீசார் முன்பு நிர்வாணமாக நின்ற ஆண் போலீஸ்.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Hariharasudhan
27 February 2025, 10:55 am

வேலூரில், மதுபோதையில் சாலையில் ரகளை செய்த காவலர், போலீஸ் ஸ்டேஷன் சிறையில் நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு நிலவியது.

வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷூ கம்பெனியின் வாகனம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, பி.கே.புரம் அருகே வாகனம் சென்றபோது, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வாகனத்தை வழிமறித்தது மட்டுமல்லாமல், தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அந்த வாகனம் கே.வி.குப்பம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, தகராறில் ஈடுபட்ட அந்த நபர் தன்னை காவலர் எனக்கூறி, வேன் ஓட்டுநரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இதுதொடர்பாக கே.வி.குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தியுள்ளார்.

இதில், ரகளையில் ஈடுபட்டவர், காட்பாடி விருதம்பட்டு காவல் நிலைய காவலர் அருண் கண்மணி (40) என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், மதுபோதையில் இருந்த அவரை, மருத்துவப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கே.வி.குப்பம் போலீசார் அன்று இரவே அழைத்துச் சென்றுள்ளனர்.

KV Kuppam

ஆனால், அங்கும் ரகளையில் ஈடுபட்ட காவலர் அருண் கண்மணி, அங்கிருந்த கதவின் கண்ணாடியை நொறுக்கியது மட்டுமல்லாமல், பணியில் இருந்த மருத்துவரையும் மிரட்டியுள்ளார். இதனையடுத்த், இதுதொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையம் மற்றும் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தொடர் வீழ்ச்சி காணும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண் கண்மணி, வேலூர் மத்திய சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார். அதோடு, அவரை சஸ்பெண்ட் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவலர் அருண் கண்மணி, ஏற்கெனவே குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, பானிபூரி கடைக்காரரை தாக்கிய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார். அது மட்டுமல்லாமல், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் மது போதையில் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக நின்றதால், பெண் போலீசார் முகச்சுழிப்பு அடைந்துள்ளனர்.

  • SJ Suryah income tax issue ஐடி ரைடில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா..கை விரித்த நீதிமன்றம்..முடிவு யார் கையில்.!
  • Leave a Reply