பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்.. AK 47 துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு : விசாரணையில் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2024, 10:51 am

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ், 55. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஆவடி விமானப் படையில் DSCபாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி ஜீவஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். காளிதாஸ் கடந்த இரு தினங்களாக, 8 ம் எண் கொண்ட விமானப்படை டவரில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை, 3:55 மணியளவில், பணியில் இருந்த போது, அவர் பயன்படுத்தி வந்த ‘ஏ. கே. 47’ ரக கை துப்பாக்கியால், தொண்டையில் தனக்கு த்தானே சுட்டுக்கொண்டதில் மூன்று தோட்டக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட விமானப்படையினர் இது குறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 251

    0

    0