பெண்களை செல்போனில் போட்டோ எடுத்த காவலர்.. அதிரடி பணியிடை நீக்கம் செய்த ஆணையர்!

Author: Hariharasudhan
22 அக்டோபர் 2024, 1:13 மணி
Traffic Police
Quick Share

பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு சமீபத்தில் டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர், அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. எனவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், அங்கு இருந்தவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று பாலமுருகனை பிடித்து, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, காவலர் பாலமுருகனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!

இந்நிலையில், பாலமுருகனிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதனை அறிக்கையாக காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம் சமர்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு காவல் அதிகாரி ஒருவர் தவறாக நடந்து மாட்டிக்கொண்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!
  • Views: - 61

    0

    0

    மறுமொழி இடவும்