தனியார் பேருந்தில் கர்ப்பிணி பெண்ணிடம் சில்மிஷம்.. கணவர் கண் முன்னே நடந்த கொடுமை.. காத்திருந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 9:01 pm

திண்டுக்கலில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் சின்னாளப்பட்டி காந்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் திண்டுக்கல்லில் மருத்துவ பரிசோதனைக்காக சென்று விட்டு கணவருடன் அந்த பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பேருந்தில் மனைவிக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. இதனால் கணவர் பின்பக்கம் நின்று கொண்டே வந்துள்ளார். கர்ப்பிணிப் பெண்ணருகே ஒரு அசாமி நின்று வந்துள்ளார்.

பேருந்து தோமையார்புரம் சென்றபோது அந்த போதை ஆசாமி கர்ப்பிணிப் பெண்ணை உரசி கொண்டு சில்மிஷம் செய்து கொண்டே வந்துள்ளார். இதைப் பார்த்த அந்தக் கர்ப்பிணிப் பெண் கணவரை கூப்பிட்டு தகவல் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணின் கணவர் அந்த போதை ஆசாமிடம் எச்சரிக்கை விடுத்து தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த ஆசாமி போதை மயக்கத்தில் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் கணவர் பேருந்தை அம்பாத்துரை காவல் நிலையத்தில் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். காவல் நிலையம் சென்றால் பேருந்து செல்ல நேராகும் என்பதால் பேருந்தை காந்தி கிராமம் பிரிவில் நிறுத்தி நடத்துனர் பேருந்தை விட்டு கீழே இறக்கி உள்ளார்.

அதே இடத்தில் தான் அந்த கர்ப்பிணி பெண்ணும் அவருடைய கணவரும் இறங்க வேண்டும் என்பதால் அவர்களின் இறங்கினர். அப்போது நடந்த விஷயத்தை அங்கு கூடியிருந்தவர்கள் கேட்டனர்.

பின்னர் அந்த பேருந்து புறப்படுவதற்கு முன்பே கணவரும் உடனிருந்தவர்களும் சில்மிஷம் செய்த அந்த ஆசாமியை சரமாரியாக தாக்கினர்.

இதில் அந்த நபருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதோடு இறுதியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோட்டில் உள்ள வடகாடுபட்டியை சேர்ந்த பில்லான் (வயது 43) என்றும், திண்டுக்கல்லில் சென்ட்ரிங் வேலை செய்வதாகவும் குடிபோதையில் பஸ் மாறி ஏறி வந்தவராகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த வாலிபரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பேருந்தில் கர்ப்பிணி பெண்ணிடம் சில்மிஷம் செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!