வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் நின்றிருந்த ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. பறந்த ஹெலிகாப்டர்.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 5:05 pm

வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் நின்றிருந்த ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. மதுரைக்கு பறந்த ஹெலிகாப்டர்!!

திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ‘சென்னை – திருச்செந்தூர் விரைவு ரயில்’, நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது.

ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அடுத்து உள்ள தாதன்குளத்தில், வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளத்தின் அடி பாகம் முழுவதும் அரித்து சென்றிருக்கிறது. கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும், ரயில் பெரும் விபத்திற்கு உள்ளாகியிருக்கும்.

இந்த ரயிலில் 700க்கும் அதிகமானோர் சிக்கியிருந்த நிலையில் முதற்கட்டமாக 100 பேர் வரை மீட்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் மூழ்கியதால் மீட்பு படையினரால், மேற்கொண்டு முன்னேர முடியவில்லை.

இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் நேற்று அவர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. இந்த பயணிகளில் ஒரு நிறை மாத கர்ப்பிணி இருந்திருக்கிறார். அவருக்கு பிரசவலி ஏற்பட்டதையடுத்து இன்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மீட்பு படையினரின் உடனடி உதவியால் பயணிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!