காட்டு யானைக்கு உணவு கொடுத்து வளர்த்த தனியார் தங்கும் விடுதி : அதிரடி ஆக்ஷன் எடுத்த நிர்வாகம்!
Author: Udayachandran RadhaKrishnan31 August 2024, 7:06 pm
உதகை மசினகுடி அருகே ஆச்சக்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஆவடேல் என்ற தனியார் விடுதியினர் காட்டு யானைகளுக்கு உணவளிப்பதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் சிங்கார வனத்துறையினர் அந்த விடுதியில் கண்காணித்த போது கடந்த ஜூன் 5-ந்தேதி கையும் களவுமாக பிடிபட்டனர்.
அதனை அடுத்து விடுதி மேலாளர் அனிருத்தா அவஸ்தியும், பணியாளர்கள் திரௌகுமார், அஜ்முசா, டேவிட் ரானா ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தற்போது அவர்கள் நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ள நிலையில் அந்த தனியார் தங்கும் விடுதி குடியிருப்புக்கான அனுமதி பெற்று கட்டப்பட்டு விதிகளை மீறி வணிக ரீதியாக பயன்படுத்திய வருவதால் மூன்று நாட்களுக்குள் காலி செய்து மூடுமாறு மாவட்ட ஆட்சிதலைவர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து மசினகுடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் விடுதியின் உரிமையாளர் சீனிவாச ராவிற்க்கு இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உதகை வட்டாட்சியர் சரவண குமார் தலைமையில் அந்த விடுதிக்கு சென்ற வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் விடுதியை காலி செய்து மூட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோடி சீல் வைக்கப்படும் என தனியார் தங்கும் விடுதியினரிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.