பைக்கில் சென்ற குவாரி ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.8 லட்சம் வழிப்பறி… மர்ம கும்பல் கைவரிசை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 5:22 pm

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள காரைகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் கிளிக்கூடு கிராமத்தில் செயல்பட்டுவரும் மணல் குவாரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல் குவாரியில் மணல் விற்பனை செய்யப்பட்ட ரூ. 8 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது உத்தமர்சீலி அருகே சில மர்ம நபர்கள் மணிகண்டன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), பாலாஜி (20), ரஞ்சித் பிரேம்குமார் (22), தாண்டீஸ்மூர்த்தி (24), ஷேக் அப்துல்காதர் (20), மற்றொரு தினேஷ்குமார் (24) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 2.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் 6 பேரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதி மன்ற உத்தரவின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 325

    0

    0