தலைக்கேறிய ‘ரத்த வாடை’.. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கடித்து குதறிய வெறி நாய்..!

Author: Vignesh
21 June 2024, 2:42 pm
dog
Quick Share

அறந்தாங்கி அருகே வெறி நாய் கடித்ததில் ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி அடுத்த அம்மாபட்டினம் ஊராட்சியில் வெறி நாய் ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்துள்ளது.

அந்த நாய் அம்மாபட்டிணம் பகுதியில் இருந்த ஆடு, மாடு, கோழிகளை கடித்து குதறிய நிலையில், அந்த நாயை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடமும், மணமேல்குடி காவல்துறையினரிடம் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஊருக்குள் வந்த அந்த வெறி நாய் அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகம்மது பாத்திமா(52), ராபர்ட்(26), முகம்மது தவுபிக்(9), தப்பிஷிரா(8), உமைரா சிபா(5), சுசேந்திரன்(7), ஹரிமித்ரன்(3) என்ற ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேரை கை, கால் தொடை, மார்பகம், இடுப்பு, தலைப்பகுதிகளில் கண்டபடி கடித்து குதறி உள்ளது. இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் நாய் கடியில் சிக்கியவர்களை மீட்டு அருகே உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Views: - 103

0

0

Leave a Reply