அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு.. கட்டணம் முழுவதும் இலவசம் : இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு வயதான பக்தர்கள் ஒரே தடவையில் சென்று தரிசிக்க சிரமப்படுகின்றனர். இவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் அழைத்து செல்ல தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
6 கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பேர் என ஆண்டுக்கு 5 முறை அழைத்து செல்லப்படுவர். வருடத்திற்கு 1,000 பக்தர்கள் என்ற கணக்கில் முதியவர்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும்.
இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டன.
அதன்படி, விண்ணப்பித்த மூத்த குடிமக்களில், தகுதி உடைய 207 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன்படி முதற்கட்டமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் ஜனவரி 28ஆம் தேதியான இன்று தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
பக்தர்களின் பயண செலவை அரசு மானியத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. தனிநபராக அறுபடை வீடுகளுக்குச் சென்று வர ரூ.50,000 வரை செலவாகும். தமிழக அரசு ஒரு நபருக்கு 15,830 ரூபாய் செலவு செய்கிறது. இந்த பயணச் செலவினை அரசு மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.