பாதை மாறி வந்த அரிய வகை ஆந்தை : சிறுமி செய்த செயல்.. தீயணைப்புத்துறையினர் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 1:52 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருநகர் விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவில் உள்ள குமரேசன் என்பவரது இல்லத்தில் ஆசியா இந்தோனேசியா பசிபிக் தீவுகளில் வாழக்கூடிய அரிய வகை களஞ்சிய ஆந்தை ஒன்று வழி மாறி வந்துள்ளது.

இதனைக் கண்ட சிறுமி சுசித்ரா உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து குமரேசன் மற்றும் மோகன் குமார் ஆகியோர் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் பால்பாண்டி மற்றும் காவலர்கள் சதீஷ்குமார் ராஜேஷ்குமார் போன்ற குழுவினர் வீட்டில் உள்ள மரத்தில் இருந்த களஞ்சிய ஆந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

மீட்ட களஞ்சிய ஆந்தையை காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

இந்த வகை ஆந்தை சாதாரணமாக ஐந்து லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்பனையாவதாகும் இது பாதுகாக்கப்பட்ட இனமாக்கப்பட்டதால் வேட்டையாடுபவர்கள் இதனை கள்ளச் சந்தையில் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது சரணாலயத்துக்கு செல்லும் ஆந்தை பாதை மாறி இங்கு வந்திருக்கலாம் என்று கூறினர்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…