ஆ.ராசா உருவபொம்மையை செருப்பால் அடித்து எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம்.. போலீசார் உடன் வாக்குவாதம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 5:34 pm

ஆ.ராசா உருவபொம்மையை செருப்பால் அடித்து எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம்.. போலீசார் உடன் வாக்குவாதம்!

நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிள்ளை குறித்து அவதூறாக பேசியதாகவும் , அவரின் பேச்சுக்கு ஆ ராசா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ ராசாவின் மீது திமுகவின் தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ ராசாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் , கிழித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…