ஆடை முழுவதும் அறை.. ₹14 லட்சம் கட்டு கட்டாக கருப்பு பணம் : பேருந்தில் பயணம் செய்த இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2024, 9:27 am

ஆடை முழுவதும் அறை.. ₹14 லட்சம் கட்டு கட்டாக கருப்பு பணம் : பேருந்தில் பயணம் செய்த இளைஞர்!

கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: வன்முறையை தூண்டினாரா அண்ணாமலை? ஏற்றுக்கொள்ள முடியாது என FIR போட்ட போலீஸ்..!!

அப்போது அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால் கருப்பு பணம் கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 206

    0

    0