நயன்தாரா – விக்கி புது வீட்டில் இவ்வளோ ரகசியமா.? என்ன என்ன பண்றாங்கன்னு தெரியுமா.?
Author: Rajesh3 July 2022, 5:52 pm
நயன்தாரா தற்போது தன் கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கிறார். பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் இருக்கும் நயன்தாரா தற்போது தங்கள் திருமண வாழ்க்கையை தொடங்குவதற்காக பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் எக்மோரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு இவர்கள் தங்குவதற்காக முன்னரே போயஸ் கார்டனில் இரண்டு பிளாட்டை நயன்தாரா வாங்கிப் போட்டு இருக்கிறார்.
அதில் ஒரு பிளாட் 8250 ஸ்கொயர் பீட் வீதம் இரண்டு பிளாட்டும் சேர்த்து மொத்தம் 16500 ஸ்கொயர் பீட் இருக்கிறது. அதில் தான் நயன்தாரா தற்போது பல கோடி செலவு செய்து ஆடம்பர வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டின் உட்புற அமைப்பு மட்டுமே கிட்டதட்ட 25 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறதாம்.
இதற்காக நயன்தாரா மும்பையில் இருக்கும் பிரபல கம்பெனியை பிரத்தியேகமாக வரவழைத்திருக்கிறார். இவர்கள் தான் ஷாருக்கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் வீட்டை வடிவமைத்து கட்டி கொடுத்தவர்களாம். அதனால் தற்போது நயன்தாராவின் வீடு பல வசதிகளுடன் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
மேலும் வீட்டுக்குள்ளேயே தியேட்டர், ஜிம் உள்ளிட்ட சகல வசதிகளும் இருக்கிறதாம். அதில் பாத்ரூம் மட்டுமே கிட்டதட்ட 1500 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட பலரும் தற்போது அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.
பாத்ரூமுக்கே இப்படி என்றால் வீடு எப்படி இருக்கும் என்பதை சொல்லவா வேண்டும். பலரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் நயன்தாரா கட்டிக் கொண்டிருக்கும் அந்த வீட்டை பற்றி தான் தற்போது திரையுலையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்திய பணக்காரர்களுக்கே சவால் விடும் அளவுக்கு உருவாகிக் கொண்டிருக்கும் அந்த வீட்டில் நயன்தாரா விரைவில் குடியேறுவதற்கு திட்டமிட்டுள்ளார்.