பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. கழிவறைக்குள் நடந்த திக் திக் நிமிடங்கள்..!
Author: Vignesh4 June 2024, 11:27 am
கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த CISF காவலர் சந்திரசேகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இங்கு பாதுகாப்பு பணிக்காக பணியில் CISF காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் விமான நிலையத்திற்குள் உள்ளே செல்கின்ற பயணிகளையும் விமானத்திலிருந்து வருகின்ற பயணிகளையும் பாதுகாப்பு பணிக்காக சோதனை செய்து வெளியில் அனுப்புவார்கள்.
இந்நிலையில், விமான நிலையத்தில் பணியில் இருந்த CISF காவலர் சந்திரசேகர் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தான் பாதுகாப்பாக வைத்திருந்த துப்பாக்கியால் தாடை பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. தற்கொலை குறித்து விமானப்படை அதிகாரிகள் CISF பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கோவை பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.