ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில், பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். மேலும், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி இந்த மோசடி வழக்கில், பாஜக பிரமுகர் அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக, பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அலெக்ஸ் மட்டுமே ஆஜராகியுள்ளார்.
அந்த வகையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்போது, ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரம் கிளையில் இயக்குநராக உள்ள ராஜா செந்தாமரை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில், 200க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 1600 கோடி ரூபாய் முதலீடாக பெற்றது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.