ஒரே இடத்தில் நடக்கும் தொடர் விபத்து.. அச்சுறுத்தும் தொப்பூர் : கோர விபத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 9:00 am

ஒரே இடத்தில் நடக்கும் தொடர் விபத்து.. அச்சுறுத்தும் தொப்பூர் : கோர விபத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

தொப்பூர் கணவாய் பகுதியில் பின்புறம் லாரி மோதியதில் முனனறு லாரிகள் இரண்டு கார்கள் விபத்து ..விபத்தில் வாகனங்கள் எரிந்து நாசம் இதுவரை மூன்று சடலங்கள் கருகிய நிலையில் மீட்பு.உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையி்ல் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் நேற்று மாலை ஒரு சரக்கு லாரி மோதியதில் 2சரக்கு லாரிகள் 2 கார்கள் ஒரே சமயத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார் மற்றும் லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இந்த விபத்தில் இதுவரை மூன்று சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களின் உள்ளே இடிபாடுகளில் பலர் சிகியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வாகனங்களை உடைத்து உள்ளே யாரேனும் உள்ளனரா என தேடி வருகின்றனர்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…