முதல் காட்சி முடியும் முன்பே லியோ படக்குழுவுக்கு ஷாக்… மொத்த பணமும் போச்சே.. பெருத்த நஷ்டத்தில் தயாரிப்பாளர்!!
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இன்று 19ஆம் தேதிக்கு திரைக்கு வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது.
ஆடியே லாஞ்ச் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதன் பின்னர் அதிகாலை 4 மற்றும் காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. படக்குழுவும் தங்களால் முடிந்த முயற்சியை மேற்கொண்டு பலனளிக்காமல் போனது.
இந்த நிலையில் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
முன்னதாக லியோ படத்தை சட்டவிரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென அரசு, தனியாரின் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், லியோ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்தார். சட்டவிரோதமாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு லியோ படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதே போல இன்று தமிழ்நாட்டில் படம் வெளியானது முதலே ஒரு சில காட்சிகளை ரசிகர்கள் தங்கள் மொபைல்களில் பதிவு செய்து வலைதளங்களில் பதிவிட்டனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தமிழ்நாட்டில் முதல் காட்சி முடியும் முன்பே, லியோ திரைப்படம் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பைரசி தளங்கள் மற்றும் சில செயலியில் இப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.