7.5% இடஒதுக்கீடு குறித்த குறும்படம்.. சர்வதேச போட்டியில் முதலிடம் பெற்று அசத்திய ‘பனையேறி’ : கொண்டாடும் அதிமுக!!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2023, 4:09 pm
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை கொண்டு வந்தவர் அப்போதை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி.
அதன்படி அரசுப் பள்ளிமாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் 7,5% இடஒதுக்கீடு குறித்து நெல்லை திசையன்விளையை சேர்ந்த இளைஞர் எடுத்த குறும்படம்தான் பனையேறி. ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை இளைஞர் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டியில் நெல்லை திசையன்விளையை சேர்ந்த இளைஞர் கணேஷ் மூர்த்தி உருவாக்கிய பனையேறி படத்துக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த தமிழனையும் தலை நிமிர செய்துள்ளது என்று ஆணித்ரமாக கூறலாம். இதை அதிமுகவினர் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினரிடையே விமர்சனத்துக்கு உள்ளானது.
ஆனால் பனையேறி குறும்படம் அந்த விமர்சனத்தை துடைத்தெறிந்துள்ளது. சர்வதேச குறும்பட போட்டியில் முதலிடம் பெற்றதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அவர்களை ஏன் புரட்சி தமிழர் என கூறுகிறோம் என்பதை எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவினர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.