பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை.. பயந்து ஓடிய பெண் யானையிடம் சிக்கி பரிதாப பலி : உடலை வாங்க மறுத்து மறியல்!
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்து 18 யானை கூட்டங்களை கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது. இந்நிலையில் ஒற்றை யானை மட்டும் வனப் பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டு இரவு நேரங்களில் வெளியேறி அருகே உள்ள விவசாயிகளின் விளைப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது,
இன்று அதிகாலை அந்த ஒற்றை காட்டு யானை அனுமந்தபுரம் பகுதியில் சுற்றி திரிந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினா என்ற இவர் கெலமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்காக சென்ற போது வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியிடம் அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி உதவி கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார் .
அப்போது எதிரே வந்த ஒற்றை காட்டு யானை துரத்தி தாக்கியதில் பெண் மட்டும் பலியானார் .இருசக்கர வாகனம் ஓட்டிசென்ற நபர் வாகனத்தை விட்டு தப்பிச் சென்று உயிர் பிழைத்தார்.
தகவல் அறிந்த கிராம மக்கள் பெண்ணின் உடலை வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என உடலை வைத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒற்றை யானையும் சிறிது நேரம் அப் பகுதியிலேயே சுற்றி திரிந்தது அதனை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்கு விரட்டினர். சாலை மறியல் காரணமாக உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் மற்றும் சூளகிரி தாசில்தார் சக்திவேல், வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட பின்னர். இறந்த பெண்ணின் உடலை எடுக்க அனுமதித்தனர்.
இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் உத்தனப்பள்ளி – கெலமங்கலம் சாலையில் ஒற்றை காட்டு யானை பெண்ணை துரத்தி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.