மலைவாழ் மக்கள் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை : வனப்பகுதிக்குள் செல்லாததால் மக்கள் அச்சம்!!
Author: Udayachandran RadhaKrishnan6 December 2022, 10:54 am
பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்ததால் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார், பட்டர்பிளை பார்க்,நவமலை,கவி அருவி,சின்னார் பதி மலைவாழ் மக்கள் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருந்தது.

வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை காட்டூர் கால்வாய் வழியாக பட்டர்பிளை பார்க்க அருகில் முகாமிட்ட இருந்தது.
நேற்று மாலை வனப்பகுதி விட்டு வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது.
வனத்துறையினர் யானை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.