கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை… ஆம்புலன்ஸ் சேதம்.. அதிகாலையில் அலறிய மக்கள் : வனத்துறை எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2024, 9:45 am
கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை… ஆம்புலன்ஸ் சேதம்.. அதிகாலையில் அலறிய மக்கள் : வனத்துறை எச்சரிக்கை!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து சானமாவு அருகேயுள்ள வனப்பகுதியில் கிராமங்கள் இரவு நேரத்தில் பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் சானமாவு , வனப்பகுதியில் இருந்து காமன்தொட்டி, அட்டகுறுக்கி, மருதாண்டப்பள்ளி உள்ளிட கிராமத்தின் வழியாக ஒற்றை காட்டு யானை ஒன்று சூளகிரி நகருக்குள் நுழைந்தன .
சூளகிரி நகரத்தின் உள்ளே நுழைந்த ஒற்றை காட்டு யானை அருகே 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களை இந்த ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது.
மேலும் பேரிகை செல்லும் சாலையில் உள்ள கட்டிகானப்பள்ளி என்னும் கிராமத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானை விவசாய நிலத்தில் பயிரிடபட்ட காய்கறிகள் மற்றும் கீரைகளை சேதப்படுத்தி உள்ளது.
மேலும் சூளகிரியை அடுத்த பேரிகை செல்லும் சாலையில் உள்ள ஏ செட்டிப்பள்ளி என்ற வனப்பகுதியில் இந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்
தற்போது காட்டு யானை ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்கோ அல்லது வாகனங்களில் வனப்பகுதி சாலையில் செல்லவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து பொதுமக்களும், வாகன ஓட்டடிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்