மீண்டும் அரிக்கொம்பனா? பழனியில் நடமாடும் ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 ஜூன் 2023, 9:47 மணி
Elephant - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள வரதமாநதி அணை, பாலாறு அணை ,சத்திரபட்டி, கோம்பைபட்டி, புதுக்கோட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை, சாலையில் சாதாரணமாக செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வந்தது.

கடந்த ஒருமாதங்களாக இந்த ஒற்றை காட்டு யானையால் கோம்பைபட்டியில் ஒருவரும் ,சத்திரபட்டியில் ஒருவரையும் அடுத்துதடுத்து இரண்டு விசாயிகளை ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர்.

இந்தநிலையில் இன்று மாலை ஒற்றை காட்டு யானை பாலாறு அணை பகுதிகளில் சர்வ சாதாரணமாக தண்ணீர் குடிக்க அணைப்பகுதி வரும் வீடியோ சமுதாயங்களில் பரவி வருகிறது வனத்துறையினர் இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 357

    0

    0