ஊருக்குள் இறங்கிய ஒற்றை காட்டு யானை.. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அச்சம்..!

Author: Vignesh
3 July 2024, 11:24 am

வனத்திலிருந்து வெளியேறி ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையை அடர் வனத்துக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் யானைகள் அதிகளவில் உள்ள வருகின்றன. காட்டு கொசு கடியால் யானைகள் தற்போது வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையிலே, மருதமலை பகுதியில் ஐ.ஒ.பி. காலனி பாலாஜி நகரில் உள்ள ஒற்றை யானை ஒன்று, இங்க பாரு குடியிருப்புகளுக்கு நுழைந்து உணவை தேடி வருகிறது.

வீட்டின் கேட்டுகளை உடைத்தும் சேதப்படுத்துகின்றன. தகவல் தெரிவிக்கும்போது சம்பூரத்திற்கு வரும் வனத்துறையினர் யானையை அட வனத்திற்குள் விரட்டி வருகின்றனர். ஆனால், யானை இரவு நேரங்களில் தொடர்ந்து வெளியே வருகின்றன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்பொழுது வெளியாகி இருக்கின்றன.

வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளை விரைந்து விரட்டவும், வெளியேறாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர். நடைப்பயிற்சி, உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறை அறிவித்திருக்கின்றனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?