மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வாகனங்களை ஏலம் விடும் போது காருக்குள் கிடந்த மண்டை ஓடு : போலீசார் சொன்ன காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 4:59 pm

மரக்காணம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் இன்று ஏலம் விடப்படும் வாகனத்தில் மண்டை ஓடு இருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுகடத்தலில் பிடிப்பட்ட 28 வாகனங்கள் இன்று மரக்காணம் காவல் நிலையத்தில் ஏலம் விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏலம் விடக் கூடிய ஒரு வாகனத்தில் அடையாளம் தெரியாத மண்டை ஓடு ஒன்று காருக்குள் இருந்ததை பார்த்த மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மரக்காணம் காவல்துறையில் விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே ஒரு மரக்காணம் காப்பு காட்டில் மர்மமான முறையில் பெண் சடலம் அழுகிய நிலையில் மண்டை ஓடு கிடந்தது.

இதனை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து வந்து மரக்காணம் காவல் நிலையம் அருகில் உள்ள காரில் வைக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!