உறங்கி கொண்டிருந்த பூண்டு வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை : விசாரணையில் பகீர்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 5:10 pm

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி இவர் வெள்ளைப்பூடு வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள சகோதரர் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று வெள்ளைப் பூண்டு வியாபாரத்திற்கு செல்லாமல் தம்பி வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.

அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து சின்ன தம்பியை அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சின்ன தம்பியின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததனர்.

அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Second Wife Mounika talk About Balu Mahendra அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!