தீ விபத்தில் சிக்கிய குட்டி நாய்…. பாசப் போராட்டம் நடத்தி அனைவரின் மனதை வென்ற தாய் நாய் : நெகிழ்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 9:57 pm

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சிவ் டிம்பர் மர சாமான்கள் தனியார் விற்பனை கடை மற்றும் கிடங்கில் மின் கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு மர கதவு ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு மரப்பொருட்கள் தீயில் கருகி கருகி நாசமானது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து பொன்னேரி அத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்ட நிலையில் குடோனில் இருந்த நாய் ஒன்று குட்டிகளை ஈன்று இருந்தது. தீ விபத்தில் மர குடோனில் தீயில் சிக்கிக்கொண்ட தனது ஒரு குட்டியை பரபரப்பாக மரப் பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் யாரையும் பொறுட் படுத்தாமல் உள்ளே சென்ற நாய் அனைத்து பகுதிகளிலும் தேடி பின்னர் தனது வாயால் அதன் குட்டியை கவ்விக் கொண்டு பத்திரமாக வெளியே கொண்டு போய் சேர்த்து தனது தாய்ப் பாசத்தை காட்டியது.

பரபரப்பான தீ விபத்து சம்பவத்தில் தாய் நாயின் பாச போராட்டம் மூலம் தனது குட்டியை மீட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழ செய்தது .

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?