அமைச்சர் பொன்முடி பங்கேற்ற நிகழ்ச்சியில் நுழைந்த பாம்பு : அரசு நிகழ்ச்சிக்கு வந்த அழையா விருந்தாளி!!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2023, 3:40 pm
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவானூர் ஊராட்சியில், இன்று 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ், ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் சிறுவானூர் மெயின்ரோடு முதல் குடியிருப்பு பகுதி வரை ரூ.4.51 இலட்சம் மதிப்பீட்டில் மின்கம்பங்களுடன் கூடிய தெருவிளக்கு வசதி ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
அப்பொழுது கூட்டத்தில் திடீரென பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு பாம்பு வந்ததால் அங்கு பொதுமக்கள் அலறி அடித்து நகர்ந்தனர். இதனால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் பொன்முடி பொதுமக்களை பார்த்து பேச தொடங்கினார். அப்போது பாம்பை படம் பிடிப்பதற்காக நின்றிருந்த செய்தியாளர்களை அங்கிருந்து நகருமாறு கூறி பேசத் தொடங்கினர். தண்ணீர் தொட்டி திறப்பு நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த தண்ணீர் பாம்பால் பரபரப்பு நிலவியது.