நூலகத்தில் படையெடுக்கும் பாம்பு, பூரான்கள் : புதர் மண்டி கிடக்கும் அவலம்… அச்சத்துடன் வரும் வாசகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 11:41 am

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் கிளை நூலகம் அருகே அதிகளவில் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி நூலகத்திற்குள் நுழைந்து வருவது வாசகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம்.

இந்த கிளை நூலகம் அருகே பட்டு வளர்ச்சி துறைக்கு சொந்தமான கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதால் கட்டிடத்தைச் சுற்றி அதிக அளவில் புதர் மண்டி கிடைக்கிறது.

இதனால் நூலகத்திற்குள் அடிக்கடி பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளே நுழைந்து விடுவதால் தாங்கள் அச்சத்துடனே படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிகின்றனர்.

மேலும் பேருந்தில் வெளியூருக்கு பயணம் செய்ய வரும் பயணிகள் சிலர் நூலகத்தின் நுழைவாயில் அருகாமையில் அமர்ந்து மது அருந்தி விட்டு மது பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதாகவும் சிலர் நுழைவாயிலேயே சிறுநீர் கழித்து செல்வதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதாகவும் வாசகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே நகராட்சி நிர்வாகத்தினர் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷ ஜந்துக்கள் வராமல் தடுக்க புதர் மண்டி கிடைக்கும் இடங்களை சுத்தம் செய்து தர வேண்டும் எனவும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 825

    0

    0