“ஊஷ், ஊஷ்” என வந்த சத்தம்… குடிநீர் கிணற்றில் விழுந்த நாகப்பாம்பை அசால்ட்டாக பிடித்த வீரர்..!

Author: Vignesh
19 August 2024, 6:14 pm

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 80 அடி ஆழமுள்ள குடிநீர் கிணற்றில் விழுந்த நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனை கிராமத்தில் 200 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக பழங்கால கிணறு ஒன்று கிராமத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்கின்ற பொது கிணற்றில் நாக நாகப்பாம்பு ஒன்று விழுந்துள்ளது.

இதனைக் கண்ட கிராம மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் உள்ள பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றின் சுற்று சுவர் பழுதான நிலையில் இருந்ததால், தீயணைப்புத் துறையினரால் கயிறு கட்டி உள்ளே இறங்க முடியாத நிலை இருந்தது.

இதனை எடுத்து கிராம மக்கள் உதவியுடன் கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேனில் இறங்கிய தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த நாகப்பாம்பை, க்பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் லாபகரமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர் என்னை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி வனத்துறையினரிடம் பாம்பை பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வனப் பகுதியில் நாகப்பாம்பை வனத் துறையினர் பாதுகாப்பாக இவ்விடுவித்தார் மேலும் பொதுமக்கள் குடிநீர் வழங்குகின்ற கிணற்றில் நாகப்பாம்பு விழுந்த சம்பவம் கிராம மக்களுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!