விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணித்த ராணுவ வீரர்.. தடுமாறி கீழே விழுந்து தலை துண்டித்த பரிதாபம்!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2024, 5:11 pm
விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணித்த ராணுவ வீரர்.. தடுமாறி கீழே விழுந்து தலை துண்டித்த பரிதாபம்!
கரூர் ரயில்வே நிலையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற இராணுவ வீரர் ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பயணித்துள்ளார்.
இன்று மதியம் கரூர் வந்தடைந்த ரயில் சிறிது நேரம் நின்றது. அப்போது கீழே இறங்கி விட்டு மீண்டும் ரயிலில் ஏறும்போது பாஸ்கர் தடுமாறி கீழே விழுந்து ரயில் சக்கரம் ஏறியதில் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உடற்கூறு ஆய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.