சமாதியில் பொங்கல் வைத்து வழிபடும் விசித்திர குடும்பம்… தலைமுறை தலைமுறை ஆக மறைந்த பெற்றோருக்கு மரியாதை செலுத்தும் நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 11:54 am

சமாதியில் பொங்கல் வைத்து வழிபடும் விசித்திர குடும்பம்… தலைமுறை தலைமுறை ஆக மறைந்த பெற்றோருக்கு மரியாதை செலுத்தும் நெகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சி, குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சாத் தேவர். இவர் 14.1.1964 ஆம் ஆண்டு தென்னக ரயில்வேயில் கொடை ரோட்டில் புக்கிங் மாஸ்டராக பணியாற்றிய போது திடீரென்று கொடூர நோய் தாக்கி காலமானார்.

இறந்த தேதி பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் என்பதால் இவரது மனைவி ரத்தினம்மாள் தனது கணவர் ஒச்சாத் தேவர் 7 குழந்தைகளுடன் தன்னை தன்னந்தனியாக விட்டு விட்டு குறைந்த வயதில் இறந்து போனதும் இதை நினைத்து தனது கணவரின் இறந்த முதல் ஆண்டு 1965 லிருந்து ரத்தினம்மாள் தனது கணவரை தனது சொந்தத் தோட்டத்தின் அருகே அடக்கம் செய்து அன்றைய காலத்திலேயே பொங்கல் பண்டிகை தினத்துக்கு முந்தைய தினம் பொங்கல் விழா கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அன்றைய காலத்தில் வரும் காலம் தனது கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டுதோறும் இனி வரும் காலங்களில் இல்லத்தில் பொங்கல் வைத்து கொண்டாடுவதில்லை என உறுதி ஏற்று தனது கணவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனது கணவர் ஒச்சாத் தேவருக்கு நினைவாக தனது குழந்தைகளுடன் தை திருநாள் அன்று மாலை நேரத்தில் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு நினைவிடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தார்.

பின்னர் தனது குழந்தைகள் வளர்ந்து பல்வேறு துறைகளில் வேலைக்கு சென்று வெளிநாடுகளிலும் வேலைக்குச் சென்று வேலை பார்த்தும் வருகிறார்கள்.

அந்த சூழ்நிலையிலும் கடந்த 18.8.2021 ஆண்டு ரத்தினம்மாள் காலமானார். அதன் பின்னர் அவரது அவரது மகன்கள் பேரன்பேத்திகள் கொள்ளுப்பேத்திகள் என ஐந்து தலைமுறையாக இன்றைய தலைமுறை உயிரோடு இருக்கும் தாய், தந்தையையே ஒருவேளை உணவுக்கு பிச்சை எடுக்கும் நிலைக்கு எத்தனையோ பெற்றோர்களை தெருவில் விட்டு விட்டு செல்லும் அவல நிலையில் சுமார் 58 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தைக்கும், அதைத்தொடர்ந்து தனது தாய்க்கும், அதன் பின் உடன் பிறந்த சகோதரிக்கும் சமாதி கட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை சமாதியில் சென்று கொண்டாடும் இந்தக் குடும்பத்தை பார்த்து இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார பொதுமக்கள் பெருமிதப்பட்டு வருகின்றனர்.

இது போன்று வரும் தலைமுறைக்கும் முன்னுதாரணமாக ஒற்றுமையோடு தாய் தந்தை மகன் மகள் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேத்திகள் என ஐந்து தலைமுறையாக பின்பற்றி வரும் காட்சியை காண்பதற்கு மிகுந்தளவில் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது மேலும் தமிழக கலாச்சாரம் பாரம்பரியம் பின்பற்ற படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ