அரசுப் பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் : விசாரணையில் சிக்கிய ஆசிரியர்.. ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 7:06 pm

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர் .இந்த தம்பதியினரின் மகன் கீர்த்திவாசன் இவர் பெருவளப்பூரில் உள்ள தனது தாய் மாமா வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் .

கீர்த்திவாசனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் ஆறுமுகம் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார் . வீட்டு படத்தை முடிக்காமல் பள்ளிக்கு நேற்று சென்ற மாணவனை ஆசிரியர் ஆறுமுகம் திட்டியதாக கூறப்படுகிறது (நாளை வரும் பொழுது பெற்றோரை அழைத்து வர வேண்டுமென கூறியதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் கீர்த்தி வாசன் தனது தாய் மாமா அழகரசன் என்பவரிடம் பள்ளியில் நடந்ததை கூறியுள்ளார் . தாய் மாமாவும் நீ பள்ளிக்கு செல் நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற கீர்த்தி வாசன் மயக்கமடைந்துள்ளார் அவரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர் .
உடனடியாக மாணவனை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார் .

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவன் பள்ளிக்கு வரும் முன்னே ஆசிரியர் தன்னை தண்டித்து விடுவார் என்ற பயத்தில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியருக்கு பயந்து மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 356

    0

    0