கல்லூரிக்கு பைக்கில் புறப்பட்ட மாணவன்.. ஆம்னி வேனை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்து : கோவையில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 11:14 am

கல்லூரிக்கு பைக்கில் புறப்பட்ட மாணவன்.. ஆம்னி வேனை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்து : கோவையில் சோகம்!!

கோவை மாதம்பட்டி அம்மன்நகர் தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் லோகநாதன் (20). இவர் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்ற லோகநாதன், மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி நோக்கிச் சென்றார். அப்போது மாதம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது முன்னாள் சென்ற ஆம்னி வேனை முந்த முயன்றாத தெரிகிறது.

அப்போது வேனில் மோதி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தில் மோதி லோகநாதன் பேருந்து சக்கரத்தில் சிக்கினார். இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பேரூர் போலீசார் லோகநாதன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி ஆண்டு விழாவிற்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 222

    0

    0