சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து : கனநேரத்தில் உயிர்தப்பிய நபர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2024, 11:42 am

சாலையில் சென்ற காரில் திடீரென தீ பிடித்ததால் சமயோஜிதமாக செய்லபட்ட 3 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அடுத்துள்ள கெஸ்ட் லைன் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஹூண்டாய் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த காரில் பெங்களூரு புறநகர் பகுதியான சந்தாபுரத்தை சேர்ந்த 3 நபர்கள் சந்தாபுரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மின் கசிவு காரணமாக காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரும் கீழே இறங்கி தப்பித்து ஓடி உள்ளனர்.

சாலையில் எரிந்து கொண்டிருந்த காரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து எரிந்த காரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?