அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து : கொளுந்து விட்டு எரிந்ததால் சிதறி ஓடிய கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2023, 4:27 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக ஜே பேரவை செயலாளரும் விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான முரளி என்கிற ரகுராமனுக்கு சொந்தமான ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடத்தி வைத்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று நிகழ்ச்சி மேடைக்கு அருகே வெடி வைத்து வரவேற்ற போது முன்னதாக விழா நடத்தப்படும் இடங்களை சுத்தம் செய்து ஒதுக்கி வைத்திருந்த முள் செடிகள் கோரை புற்கள் கொடிகள் மீது பட்டாசு பொறி விழுந்து தீப்பற்றி எரிந்தது.

அப்போது எரியும் இடத்தில் நின்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து விடுமோ என்று பயந்து ஒரு சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் காவல்துறையினரும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முற்பட்டாலும் தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை நகற்ற முயற்சி செய்தனர் பலன் அளிக்காததால் பொக்லைன் இயந்திரத்தை வைத்து மணல் குவியலாக கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

மேலும் அங்கிருந்த குடிநீர் டிராக்டரை கொண்டு வந்து தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு அனைத்தனர் இதனால் விழா மேடை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

சில நாட்களாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் எதிர் எதிர் கருத்து கூறிவரும் நிலையில் அதிமுக நிர்வாகி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற திருமண விழாவை முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்த நிகழ்வு விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…