பாலியல் வழக்கில் தற்கொலை செய்த பள்ளி மாணவி விவகாரத்தில் திடீர் திருப்பம்… ஆசிரியரின் மனைவி அதிரடி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 10:17 am

கோவையில் கடந்த 2021ம் ஆண்டு தனியார் பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் பள்ளியில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கைதான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனா கைது.

மாணவி இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அர்ச்சனாவை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன், மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவி மிதுன் சக்கரவர்த்தியால் பாலியல் துன்புறுத்தல் செய்யபட்டது தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!