திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோ வெளியானதால் விபரீதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 9:45 am

திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோ வெளியானதால் விபரீதம்!!!

திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவர் பட்டறை வேலை செய்து வந்ததால் இவருக்கு அடைமொழியாக பட்டறை சரவணன் என நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

இவர் தற்போது திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பவதாரணி என்ற மனைவி மற்றும் வேதமித்திரன் என்ற 2 வயது மகன் உள்ளனர், இவர் தனது குடும்பத்துடன் வ உ சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்

இவர் மீது கொலை, கொலைமுயற்சி, அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் தைலத் தோப்பில் தனது 2 வயது குழந்தையுடன் விளையாட சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு தனது குழந்தையுடன் வந்துள்ளார்.

அப்பொழுது அண்ணாநகர் அருகே சாலையில் வந்தபோது காரில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டறை சரவணனை கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை, மற்றும் உடம்பில் பல இடங்களில் வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது, இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.

முதல் கட்ட போலீஸ் விசாரணையில் சரவணனை முன் பகை காரணமாக கொலை செய்தது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட சரவணன் நண்பரான பேகம்பூர் நத்தர்ஷா தெருவை சேர்ந்த பார்த்த என்ற இப்ராம்ஷா என்பவரை திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடியும் இந்திய தேசிய லீக் முன்னாள் மாநில இளைஞரணி தலைவரான அல் ஆசிக் என்ற ஆசிக் முகமது மிரட்டி பணம் கேட்டது தொடர்பாக அல்-ஆசிக்கும் சரவணனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதற்கு சிறிது நாட்களுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டில் பார்த்தா என்ற இப்ராம்ஷாவை அல் ஆஷிக் தரப்பினர் குட்டியபட்டி அருகே வைத்து கொலை செய்தனர். இந்த நிலையில் தான் அல் ஆசிக்கிற்கும், சரவணனுக்கும் நேரடி மோதல் தொடங்கியது.

இதற்கிடையில் அல் ஆஷிக் ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வெளிவர தொடங்கியது இதற்கு காரணம் சரவணன் தான் என நினைத்த அல் ஆஷிக் சரவணன் கொலை செய்ய திட்டம் தீட்டி பல நாட்களாக பின் தொடர்ந்து வேவு பார்த்து தனது ஆதரவாளர்களுடன் நேற்று சம்பவ இடத்தில் வைத்து கொலை செய்து உள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் 1. அல் ஆசிக் என்ற ஆசிக் முகமது,2. முகமது மீரான்3. கலீல் அகமது4, சதாம் உசேன் 5 முகமது இர்ஃபான்,6 சக்தி மகேஸ்வர், 7முகமது அப்துல்லா, 8 சேக் அப்துல்லா ஆகிய எட்டு பேர் குற்றவியல் நடுவர் முன் சரண் அடைந்தனர்

அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த 8 பேரையும் போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஜே.எம்.2 நடுவர் மீனாட்சி முன்பு ஆஜர் படுத்தினர், 8 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டு. மீண்டும் 04-08-2023 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறினார், இதையடுத்து 8 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் 8 பேரையும் வரும் திங்கள் கிழமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 699

    1

    0