Categories: தமிழகம்

பிரபல தொழிலதிபரை மயக்கி பணம், கார் என பல லட்சம் சுருட்டிய டீச்சர்… பல ஆண்கள் சிக்கியது அம்பலம்!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜன் என்பவரின் மகன் ராஜேஷ் நாடார் (வயது 44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேனின் மூலமாக அவரது சகோதரி கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நவநாகரீகமாக மாடர்னாக ஆடை அணிந்து வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஹேசல் ஜேம்ஸ் வெளியிட்டு இருந்ததால் ராஜேஷ் நாடாருக்கு பிடித்துப் போனது.

இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டனர். ஆரம்பத்தில் ஹேசல் ஜேம்ஸ் தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேஷ் நாடார் உடன் பழகி வந்துள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இருந்த போதும் ராஜேஷ் நாடார் ஹேசல்ஜேம்ஸ் உடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென ஒரு நாள் ஹேசல் ஜேம்ஸ் தனக்கு திருமணமானது உண்மை என்றும் கணவன் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இருந்த போதும் ஹேசல் ஜேம்ஸின் பேச்சில் மயங்கிய ராஜேஷ் நாடார் அது ஒரு விஷயம் இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதாக கூறி இருக்கிறார். இதை நம்பிய ராஜேஷ் நாடார் 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார்.

தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியிருக்கிறார். இதனால் ராஜேஷ் நாடார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.

பொருட்களை ஹேசல் ஜேம்ஸ் தனது தந்தை பெயரில் அனுப்புமாறு கூறி வாங்கியுள்ளார். ஸ்கோடா காரை தனது அண்ணன் விவின் கிறிஸ்டோ பெயரில் ஹேசல் ஜேம்ஸ் பதிவு செய்து கொண்டார். ராஜேஷ் நாடார் ஹேசல் ஜேம்சை மிகவும் நம்பி இருந்தார் .

இந்நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இதே போல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ் நாடாருக்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் நாடார் இது குறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது நல்லது இல்லை என்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தொழிலதிபர் ராஜேஷ் நாடார் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு தொடர்பு கொண்ட ராஜேஷ் நாடார் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் தான் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்து போய் இருந்த ராஜேஷ் நாடார் மீண்டும் சில நாட்கள் கழித்து தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டி இருக்கிறார் .

இதனால் ராஜேஷ் நாடார் பயந்து போனார். இதை தொடர்ந்து ராஜேஷ் நாடார் கோவைக்கு வந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இடம் இது குறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தெற்கு உதவி கமிஷனர் சதீஷ் குமார் தலைமையில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மும்பை தொழிலதிபர் ராஜேஷ் நாடார் இடம் பழகி மோசடி செய்த ஹேசல் ஜேம்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்தது .

ஹேசல் ஜேம்சின் தந்தை ஜேம்ஸ் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். தாய் கோவையில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

ஹேசல் ஜேம்ஸ்க்கு கல்லூரியில் படிக்கும் பொழுது கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் போலீஸ் அதிகாரியின் மகனை மதம் மாறக் கூறியதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வருகின்றனர்.

மேலும் இவர்களுடைய விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹேசல் ஜேம்ஸ் கோவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து அங்கிருந்து இவரது நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு போலீஸ் அதிகாரியின் மகன் தனது குழந்தையை பார்ப்பதற்காக போத்தனூரில் உள்ள ஹேசல் ஜேம்ஸ் வீட்டிற்கு சென்றார். மும்பை தொழிலதிபருடன் பேசி பழகி இருபது லட்ச ரூபாய் வரை பணம் கார் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஹேசல் ஜேம்ஸ் ஏமாற்றியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவருடன் பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஹேசல் ஜேம்ஸ் தனது முதல் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷ் நாடாரை ஏமாற்றி பழகி பின்னர் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி ஆசிரியை ஹேசல் ஜேம்ஸ் மீது 420,406,506(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 minutes ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

10 minutes ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

56 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

1 hour ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

2 hours ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

This website uses cookies.