மகளிர் பள்ளி கழிவறைக்குள் மாணவிகளுக்கு நடந்த கொடூரம் : தப்ப முயன்ற ஆசிரியருக்கு செருப்படி!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2024, 11:25 am
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்பவர் சத்யநாராயணா.
ஆசிரியர் சத்ய நாராயணா மாணவிகளின் கழிவறைக்கு சென்று ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு ஆவேசத்துடன் சென்றனர்.
இதையும் படியுங்க: திடீர் நிலநடுக்கம்.. அடுத்தடுத்து குலுங்கிய மாநிலங்கள் : மக்கள் பீதி!
மாணவிகளின் பெற்றோர் அடைந்த ஆவேசம் அவருடைய கோபம் ஆகியவற்றை பார்த்து அஞ்சி ஆசிரியர் சத்தியநாராயணா பள்ளியின் சுவர் ஏறி குதித்து ஓட முயன்றார்.
உடனே அவரை பிடித்து சரமாரியாக செருப்பால் அடித்த பெற்றோர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.