அவனை விட்றாதீங்க.. உடை முழுக்க ரத்தக்கறை; சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்..!

Author: Vignesh
19 August 2024, 7:09 pm

திருச்சி தென்னூரை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகள் இறந்து விட்ட நிலையில் 10வயது பேத்தியை தனது பராமரிப்பில் வளர்த்து வருகிறார். சிறுமி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார்.

நேற்று முன்தினம் சிறுமி தாத்தாவிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இது குறித்து அந்த முதியவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையின சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தென்னூர் வாமடம் சாலையில் அந்த சிறுமி நடந்து வந்து கொண்டிருந்துள்ளார்.
அதனைப் பார்த்த ஒருவர் அவரை மீட்டு தாத்தாவிடம் ஒப்படைத்தார்.

சிறுமி உடையில் ரத்த கரை இருந்ததை பார்த்த அவர் சிறுமியின் தாத்தா தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தில்லைநகர் காவல்துறையினர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமியை ஒரு நபர் தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் காமினி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் தீவிர விசாரணை காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் இருக்கும் பல்வேறு சிசி டிவி காட்சிகளை கொண்டு விசாரணையும் மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்த சின்னராஜா(25) என்பது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் அந்த நபரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது அவர் சிதம்பரத்தில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து சிதம்பரத்தில் தலைமறைவாக இருந்த சின்ன ராஜாவை காவல்துறையினர் கைது செய்து திருச்சிக்கு இன்று அழைத்து வந்தனர். அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது . உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்ன ராஜா மீது காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 251

    1

    0