கோவையில் பள்ளி பேருந்தில் சிக்கி இளம்பெண் பரிதாப பலி: உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்று திரும்பிய போது சோகம்..!!

Author: Rajesh
17 March 2022, 1:27 pm

கோவை: கோவை மதுக்கரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் 25 வயதான, வினிதா மேரி இவர் நேற்று புலியகுளத்தில் தனது உறவினர் வீட்டு இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நேற்று இரவு வினிதா மேரி, தன்னுடைய மாமனார் மதலை முத்துவுடன் ஸ்கூட்டரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பாலக்காடு ரோடு, சுகுணாபுரம் அருகே தனியார் பள்ளி பேருந்து, வனிதா மேரி சென்றுகொடிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த வினிதா மேரி பேருந்து டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இவரின் மாமனார் மதலை முத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து கோவை மேற்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினரின் இறுதி சடங்கிற்கு கலந்துகொண்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண் இப்படி பேருந்து சக்கரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1447

    0

    0