பூட்டிய வீட்டில் திருடிவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்.. என்ன அவசரமோ? கோவையில் ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 6:16 pm

பூட்டிய வீட்டில் திருடிவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்.. என்ன அவசரமோ? கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை தொண்டாமுத்தூர் சாலை அருகே உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (44). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

விடுமுறை தினம் என்பதால் இவரது மனைவி மகன் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். நேற்று மதியம் அவர்களை அழைத்து வர குமார் தன் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார்.

இன்று காலை 7 மணி அளவில் தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்த போது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்தன.

மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை – பணம் காணாமல் போயி இருந்தது. மேலும் வீட்டின் பின் பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் படிக்க: நடுவானில் குலுங்கிய விமானம்.. ஒருவர் உயரிழப்பு : பயணிகள் பலர் படுகாயம்..!!

வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது நகை 22 பவுன், பணம் 3 லட்சம் வரை கொள்ளை போனதாக‌ முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளை அடித்து சென்ற கொள்ளையன் வீட்டின் நடுவே மலம் கழித்து சென்று உள்ளான்.இந்த சம்பவம் இந்த பகுதியில் முற்றிலும் வித்தியாசமான சம்பவம் எனவும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி முழுவதும் மக்களுக்கு தெரிந்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ